Tuesday, September 24, 2013

தேடல்

தேடல் என்பது..
 தண்ணீரும் தாமரை இலையும் போல் இருக்கலாகது

ரத்தமும் உடலுமாய் இருக்க வேண்டும்.

ரசிகர்கள் என்பது ஆலமரம் போல் இருக்கவோண்டும்
பச்சோந்தியாக இருத்தலாகாது.

அன்பில் உண்மை இருத்தல் வேண்டும்
அன்பில் சலனம் இருத்தலாகது.

----------------
உண்மையின் உழப்பில் வெளிச்சம் மிளிரும்
சிந்தனைகள் செதிக்கி எடுத்து
நல்லதை செய்பவன் உலகை
ஆழ்பவன்



25-09-2013

ஜரோப்பிய தமிழ்வானொலியில் 
(22-09-2013) ஒலிபரப்பாகிய என் இசையின் மடியில் 
நிகழ்ச்சியை கேட்க இங்கே 

https://archive.org/details/MGRSongsEtrIsaiyinMadiyilRahini

உறக்கத்தின் விம்பத்தில்..
விழிகளில் நிலா தாளமிட..
நட்சத்திரங்கள் எல்லாம் ..
எல்லாம் மின் மினி பூச்சிகள் போல்..
வந்து வந்து மறைய.

பூக்கள் சத்தமின்றி முத்தமிட..
பனித்துளிகள் புற்கள் மேல் நடனமிட..
இரவின் தேடல் தொடர..
முடிவின்றி பயணிக்கும் ..
வாழ்வின் அர்த்தங்களை தேடத்தொடங்க..
காத்திருப்பதுதான்..
விடியலின் ஆரம்பம்!

-----


இரவுப்பொழுதில் அழகிய கவிதையாய் 
ஒருவரை ஒருவர் அறிந்து தெளிந்து
செதுக்கி எடுக்கும் சிப்பம் ஒன்று
பூமியை முத்தமிட தயாரிகிக்கொள்கின்றது.

--------
அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமல்
புரிந்தும் புரியாமல் தெளிவான காதலை 
விழகளில் கான உதவுகின்றது நிலா முகம்.

No comments:

Post a Comment